ஆறாவது அறிவு வரை வென்றெடுக்க..? ......எந்திர அறிவு கொள்,சூழ்ச்சி அறி,காமத்தையும் புகழையும் வென்று எடு பணம் உனக்கு தேவைபடாது...! இனி எழாவது அறிவை நோக்கி ...........
Monday, 9 August 2010
THERE WILL BE BLOOD
1890 களில் அமெரிக்காவெங்கும் எண்ணெய் (பெட்ரோல்) மோகம் பிடித்து தோண்டிய இடம் எல்லாம் எண்ணெய் வளம் பொங்க, ஏகப்பட்ட
கோடீஸ்வரர்கள் உருவானார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் கதைதான் இது.
நாயகன் டேனியல் ப்ளைன்வ்யூ பணம் சம்பாதிப்பதையே குறியாக கொன்டவன். ஊர் ஊராகச் சென்று நிலங்களை கையகப்படுத்தி பின்னர், அவற்றில் எண்ணெய் கிணறுகள் தோண்டி கோடி, கோடியாகச்
சம்பாதிக்கிறான். அவனுடைய ஒரே மகன், கிணறு தோண்டும் வெடி வெடித்து காது கேட்கும் திறனை இழக்க, அவனை கவனிக்க நேரம் இல்லாததால் வெளியூருக்கு அனுப்பிவிடுகிறான்.
டேனியல் பணபலத்திற்கும், முரட்டுத்தனத்திற்கும் எல்லோரும் பயந்து நடுங்கும் போது, எலை சண்டே என்பவன் அவனை அடிக்கடி உரசுகிறான். சண்டே ஒரு போலி மத போதகன். நம் ஊர் போலி சாமியார் ரேஞ்சுக்கு மக்களை ஏமாற்றி பெரியாளாக முயலும் அவனைப் பார்த்தாலே டேனியலுக்கு எரிகிறது.
சண்டேயின் அப்பாவை ஏமாற்றி அவர் நிலத்தையும் வாங்கிவிடுகிறான் டேனியல். இந்நிலையில் அவனுடன் இருந்துகொண்டு அவன் தம்பி என்று சொல்பவன், உண்மையில் தம்பி அல்ல என்று தெரிந்தவுடன் டேனியல் ஈவு இறக்கம் இல்லாமல் அவனைக் கொல்கிறான்.
இதைப் பார்த்துவிடும் சிலர் எலை சண்டேயிடம் போட்டுக் கொடுக்க, அவன் டேனியலை சர்ச்சுக்கு வரச் செய்து ஊரார் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைக்கிறான். அதோடு நில்லாமல் தன்னுடைய சர்ச்சுக்கு பெரும் தொகை ஒன்றும் கேட்கிறான்.
அது வரை யாருக்கும் அடிபணியாத டேனியல் தன்னுடைய எண்ணெய் வியாபாரம் பறிபோய் விடக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் இதற்கு ஒப்புக் கொள்கிறான். இப்போது சில வருடங்களாக வெளியூரில் இருக்கும் டேனியலின் மகன் ஊர் திரும்புகிறான். அவனுக்கு நிரந்தரமாக காது கேட்கும் திறனுடன், பேசும் திறனும் போய்விட, தன்னுடைய நிர்வாகத்தை பார்த்துக்கொள்ள கையாலாகாத மகனை நினைத்து, நினைத்து டேனியலின் கோபம் வெடிக்கிறது. பிறகு மளமளவென அந்த பெருங்கோபத்தில் அவன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது டேனியல் டே லூயிஸின் அற்புதமான நடிப்பிற்கு ஒரு உதாரணம்.
மூட மத நம்பிக்கையை ஊதி வளர்க்கும் போலி சாமியார், பண வெறியில் எல்லாவற்றையும் இழக்க துணியும் பேராசைக்காரன், தன்னுடைய தந்தையே தன்னுடைய ஊனத்தைப் பார்த்து கேலி செய்வதைக் கண்டு மறுகும் மகன், இப்படி வித்தியாசமான பாத்திரங்கள் சிறப்பாக வந்தாலும் டேனியல் டே லூயிஸ் தூள் கிளப்புகிறார். சென்ற வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அவர் தட்டி சென்றதில் வியப்பில்லை.
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment