கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்பார்கள். ஆனால் அந்த தங்கத்தமிழ் அடுத்த நூற்றாண்டில் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. மொரிஷியஸ் நாட்டில் வாழ்பவர்களில் பலர் தமிழர், தமிழ்ப் பெயர்களில்தான் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. அந்த நிலை தமிழ் நாட்டுக்கும் வந்து விடும் என்கிறார், தமிழ் இணையப் பல்கலைக் கழக இயக்குனர் மு. பொன்னவைக்கோ.தற்போது உலகம் முழுவதும் 6000 மொழிகள் உள்ளன. ஆனால் வருகிற 22-ம் நூற்றாண்டில் அதாவது அடுத்த நூற்றாண்டில் 80 சதவீத மொழிகள் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவலை யுனஸ்கோ அறிவித்துள்ளது.
மற்றொரு ஆய்வு உலகில் அடுத்த நூற்றாண்டில் 12 மொழிகள் மட்டும்தான் வளமையுடனும், செழிப்பாகவும் இருக்கும் என்கிறது. இந்த இரண்டு ஆய்வறிக்கைகளிலும், கூறப்படும் எஞ்சியுள்ள மொழிகளில் தமிழ் இல்லை. இந்தியாவில் தற்போதுள்ள 18 மொழிகளில் இரண்டே இரண்டு மட்டும் தான் எஞ்சி நிற்கப் போகின்றன. அவை இந்தி, வங்காளி மட்டுமே. தமிழ் கூறும் நல்லுலகம் என்ன பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யப் போகின்றன?
ஒவ்வொரு ஆண்டும் பல மொழிகள் சிதைந்து மறைந்து வருகின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்த மாற்றங்களால் பல மொழிகள் மறைந்தன. மறைந்து வருகின்றன. இன்னும் நூறு ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்று இருக்கிறது.மொழிகள் ஏன் மறைகின்றன என்ற வினாவுக்கு விடைகள் பல உள்ளன. மொழி பேசுவோரை அடியோடு அழித்துவிட்டால், அவர்களை உலகெங்கும் சிதறடித்து விட்டால் மொழி அடியோடு மறைந்து போகலாம்.அமெரிக்கப் பழங்குடிகள், யூதர்கள், ஆர்மினியர்கள், ஈழத்தமிழர்கள் போன்றோர் இந்த இடரை நோக்கிச் செயல்பட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் தம் மொழியைக் காப்பாற்ற அரும்பாடுபட்டு வெற்றியும் கண்டிருக்கின்றனர். இருப்பினும், பெரும்பாலும் மொழிகள் அழிவது அந்தந்த மொழி பேசும் குடிகள் தாமாகவே தம் மொழியை உதறுவதால் தான் என்பது அறிஞர்கள் கருத்து. ஏன்? தாய் மொழியை உதறி வேறு மொழியை ஏற்கிறார்கள் என்பதை அறிஞர்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
பிஷ்மன் என்ற அறிஞரின் கருத்துப்படிஅவ்வகைக் காரணங்களில் சில.. புலம் பெயர்தல், இடம் விட்டு இடம் பெயரும் மக்கள் பிழைப்புக்காக வேறு மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் வேற்று மொழி மக்களை மணமுடித்துக் கொண்டால், மொழியை உதற வேண்டிய இக்கட்டுக்கு ஆளாகலாம்.பொருளாதார சிக்கல்கள்.. வேலைவாய்ப்புக்காகவும், வணிகத்துக்காகவும் ஆதிக்க மொழியைக் கற்க வேண்டி வரும். நாட்டுப்பறங்களில் வேளாண்மையை நம்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும்போது தாய் மொழியை விட்டு விடத் தேவையில்லை. ஆனால், மற்ற குடிகளோடு வணிகம் செய்யும் போது ஆதிக்க மொழிகளை எதிர்ப்பது கடினமே. உங்கள் வாடிக்கையாளர்களின் மொழியே உங்கள் மொழியாக வேண்டிய நிலையில் தாய் மொழியைத் தக்க வைத்துக் கொள்வது எளிதல்ல.
ஊடகங்கள்.. தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாட்கள், இணையம் போன்ற ஊடகங்கள் ஆதிக்க மொழியின் வீச்சுக்கு அடிமையாகின்றன. எம்.டிவி. மற்றும் அமெரிக்கத் தொலைக்காட்சிகளின் வல்லமையை அளவிட முடியாது. கணினி விளையாட்டுகள் போன்றவையும் மனமகிழ்ப் போர்வையில் ஊடுருவுகின்றன. மேட்டுக்குடி குறியீடுகள்..
மக்கள் பெரும்பாலும் தாம் மதிப்பவர்களைப் போல் மேட்டுக்குடியினரைப் போல் வாழ நினைப்பார்கள். ஆளும் வர்க்கத்தின் பழக்க வழக்கங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பது பல முறை நடந்திருக்கிறது. ஆதிக்க மொழியின் மோகத்தில் தாய் மொழியைத் தவிர்ப்பதும் அடிக்கடி நடப்பதுதான். தாய் மொழியையும், தம் பண்பாட்டையும் தாழ்வாக நினைத்து அவற்றைத் துறப்பதைப் பல நாடுகளில் காணலாம். அதில் குறிப்பாக இளைஞர்களிடம் காணலாம். நாம் இதுவரை குறிப்பிட்ட அறிகுறிகள் தமிழ் பேசும் மக்களிடம் இல்லையென்று மறுக்க இயலாது. கூடிய மட்டிலும் தமிழில் எழுதத் தெரிந்தவர்கள், அதிலும் தமிழ் நூல்களைக்கற்றுக் கொள்ளத் தெரிந்தவர்கள் தமிழ் மடற்குழுக்களில் எழுதும் பொழுது தமிழிலேயே எழுத வேண்டும். அவர்களும் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தமிழுக்கு வரும் இன்னொரு இடர்ப்பாடு என்று கருத வேண்டியிருக்கிறது.
வடமொழிக் கலப்பால், தெலுங்கு, கன்னடம், பிறகு மலையாளம் ஏற்பட்டது போல் இப்பொழுது தமிங்கிலர் என்ற புதிய மொழி பேசுபவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எப்படிச் சிங்களர்கள், கலிங்கர்கள் தமிழர் கலப்பால் தோன்றிப் பின் தமிழரையே புறந்தள்ளினரோ, அது போல இந்தத் தமிங்கிலர்கள் தமிழரைப் புறந்தள்ளத் தயங்க மாட்டார்கள்.
இதற்குத் தமிழ்நாட்டின் சில அரசியலாளர்களும், முன்னிலையில் இருக்கும் அறிஞர்களும் உடந்தை. தமிழ்நாட்டில் உள்ள அதிகார வர்க்கமும் இதற்கு உறுதுணையாக உள்ளனர். இனியும் இருப்பார்கள். இவர்களுக்கு இன்னொறு உறுதுணையாக இருப்பது சர்ச் கான்வென்ட், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் கல்வி வணிகர்கள். இந்த பாழாயப்போன தமிழாசிரியர்கள் ஒருகாலத்தில் நாட்டுப்புறங்களில் தலைமையாசிரியரைக் காட்டிலும், தமிழாசிரியருக்கு ஊரிலும் மாணவரிடத்திலும் கூடவே மதிப்பு இருந்தது. பட்டி மன்றம், வழக்காடு மன்றம் என்று அலைந்து தங்கள் பொருளாதார நலம் பேணுவதிலேயே குறியாய் இருந்து தங்களுக்கென்று இருந்த தலைமைப் பண்பை இழந்து தறுதலையாய்ப் போனார்கள். மக்கள் வழி பிறழ்ந்தார்கள். இது புண்படுத்துவதாய் இருக்கலாம். ஆனால் உண்மை நிலைமை மிகவும் பாடாவதியாக இருக்கிறது. தேர்வடம் பிடிக்க எத்தனை பேர் வருவீர்கள் என்பதுதான் கணக்கே தவிர, வடம் பிடிக்கலாமா என்பதல்ல. இப்படியே இருந்தால், என்றைக்கு வடம் பிடிப்பது? என்றைக்குத்தேர் நிலை கொள்வது?
ஆறாவது அறிவு வரை வென்றெடுக்க..? ......எந்திர அறிவு கொள்,சூழ்ச்சி அறி,காமத்தையும் புகழையும் வென்று எடு பணம் உனக்கு தேவைபடாது...! இனி எழாவது அறிவை நோக்கி ...........
Wednesday, 11 August 2010
Monday, 9 August 2010
Sachin Tendulkar Profile
Sachin Ramesh Tendulkar
Born : 24 April 1973, Bombay
Major Teams: Mumbai, Yorkshire, India.
Known As : Sachin Tendulkar
Batting
Style: Right Hand Bat
Bowling
Style: Right Arm Off Break,
Leg Break, Right Arm Medium
Favourites of Tendulkar
Ground : Sydney cricket ground
Movie : Coming to America
Music : Pop
Hobby : Collecting CD's.
Car : Maruti
Actors : Amitabh Bacchan, Nana Patekar
Actress : Madhuri Dixit
Cricket
Heroes : Gavaskar, Viv Richards, Imran Khan and Sandeep Patil
Other Fav
Stars : Maradona, Borris Becker
Drink : Orange / Apple juice and water
Food : Steak
Pastime : Listening to peaceful music with friends
Clothes : Official jacket and tie, else jeans and T-shirt
Magazine : Sportstar
News
papers : Times of India, Mid-day, Afternoon Dispatch
Restaurant : Bukhara, Maurya Sheraton
Holiday
Resort : Yorkshire, Headingley
Hotel : Park Royal Darling Harbour, Sydney
Other
Sports : Tennis
Major
Teams : India, Mumbai and Yorkshire
Memorable
Day : Beating Pakistan in the 1992 World Cup
Worst
Day : Losing the fist ODI in RSA in 1992
Greatest
Influence : Family
Ambition : To be number one in the world
Dream
Woman : My wife
Current Players
Admired : Vinod Kambli, Brian Lara and Jonty Rhodes
Embarrasing
Moment : People asking for my autograph and then asking me my name
Hate : Rumors
THERE WILL BE BLOOD
1890 களில் அமெரிக்காவெங்கும் எண்ணெய் (பெட்ரோல்) மோகம் பிடித்து தோண்டிய இடம் எல்லாம் எண்ணெய் வளம் பொங்க, ஏகப்பட்ட
கோடீஸ்வரர்கள் உருவானார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் கதைதான் இது.
நாயகன் டேனியல் ப்ளைன்வ்யூ பணம் சம்பாதிப்பதையே குறியாக கொன்டவன். ஊர் ஊராகச் சென்று நிலங்களை கையகப்படுத்தி பின்னர், அவற்றில் எண்ணெய் கிணறுகள் தோண்டி கோடி, கோடியாகச்
சம்பாதிக்கிறான். அவனுடைய ஒரே மகன், கிணறு தோண்டும் வெடி வெடித்து காது கேட்கும் திறனை இழக்க, அவனை கவனிக்க நேரம் இல்லாததால் வெளியூருக்கு அனுப்பிவிடுகிறான்.
டேனியல் பணபலத்திற்கும், முரட்டுத்தனத்திற்கும் எல்லோரும் பயந்து நடுங்கும் போது, எலை சண்டே என்பவன் அவனை அடிக்கடி உரசுகிறான். சண்டே ஒரு போலி மத போதகன். நம் ஊர் போலி சாமியார் ரேஞ்சுக்கு மக்களை ஏமாற்றி பெரியாளாக முயலும் அவனைப் பார்த்தாலே டேனியலுக்கு எரிகிறது.
சண்டேயின் அப்பாவை ஏமாற்றி அவர் நிலத்தையும் வாங்கிவிடுகிறான் டேனியல். இந்நிலையில் அவனுடன் இருந்துகொண்டு அவன் தம்பி என்று சொல்பவன், உண்மையில் தம்பி அல்ல என்று தெரிந்தவுடன் டேனியல் ஈவு இறக்கம் இல்லாமல் அவனைக் கொல்கிறான்.
இதைப் பார்த்துவிடும் சிலர் எலை சண்டேயிடம் போட்டுக் கொடுக்க, அவன் டேனியலை சர்ச்சுக்கு வரச் செய்து ஊரார் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைக்கிறான். அதோடு நில்லாமல் தன்னுடைய சர்ச்சுக்கு பெரும் தொகை ஒன்றும் கேட்கிறான்.
அது வரை யாருக்கும் அடிபணியாத டேனியல் தன்னுடைய எண்ணெய் வியாபாரம் பறிபோய் விடக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் இதற்கு ஒப்புக் கொள்கிறான். இப்போது சில வருடங்களாக வெளியூரில் இருக்கும் டேனியலின் மகன் ஊர் திரும்புகிறான். அவனுக்கு நிரந்தரமாக காது கேட்கும் திறனுடன், பேசும் திறனும் போய்விட, தன்னுடைய நிர்வாகத்தை பார்த்துக்கொள்ள கையாலாகாத மகனை நினைத்து, நினைத்து டேனியலின் கோபம் வெடிக்கிறது. பிறகு மளமளவென அந்த பெருங்கோபத்தில் அவன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது டேனியல் டே லூயிஸின் அற்புதமான நடிப்பிற்கு ஒரு உதாரணம்.
மூட மத நம்பிக்கையை ஊதி வளர்க்கும் போலி சாமியார், பண வெறியில் எல்லாவற்றையும் இழக்க துணியும் பேராசைக்காரன், தன்னுடைய தந்தையே தன்னுடைய ஊனத்தைப் பார்த்து கேலி செய்வதைக் கண்டு மறுகும் மகன், இப்படி வித்தியாசமான பாத்திரங்கள் சிறப்பாக வந்தாலும் டேனியல் டே லூயிஸ் தூள் கிளப்புகிறார். சென்ற வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அவர் தட்டி சென்றதில் வியப்பில்லை.
THE RAINMAKER
The RainMaker. என்னுடைய மனம் கவர்ந்த John Grisham எழுதிய நாவல், அதே பெயரில் 1997 ம் வருடம் வந்த படம். The Godfather படத்தை இயக்கிய Francis Ford Coppola தான் இந்த படத்தையும் இயக்கினார்.
நாயகன் ரூடி பேலர் (Matt Damon) ஒரு வளர்ந்து வரும் லாயர். அதிர்ஷடவசமாக லட்டு மாதிரி ஒரு கேஸ் கிடைக்கிறது. கூட இன்னொரு லாயரான டெக் (எனக்கு பிடித்த இன்னொரு அற்புதமான நடிகர், Danny De Vito) துணையுடன் ஒரு மிகப்பெரிய இன்ஷுரன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து போராட முற்படும்போது ஏகப்பட்ட பிரச்சினைகள்.
ஒரு மிகப்பெரிய சிகரட் நிறுவனம் தயாரிக்கும் சிகரட்டை புகைப்பதால் ஒரு இளைஞன் மிகச் சிறிய வயதில் புற்று நோய் வந்து அநியாயமாக இறக்கிறான். அவனுக்கு கிடைக்க வேண்டிய இன்ஷுரன்ஸ் பணம் கிடைக்காதபோது, ரூடி அந்த நிறுவனத்துடன் மோதி நியாயம் கிடைக்க பாடுபடுகிறான்.

அந்த இன்ஷுரன்ஸ் நிறுவனத்திற்கோ காம்பன்செஷன் குடுப்பதில் உடன்பாடில்லை. மிகப் பிரபலமான வக்கீல்களின் துணையுடன் நாயகனை அடக்கப் பார்க்க, அவன் டெக் துணையுடன் அந்த நிறுவனத்தை மண்டியிட வைக்கிறான்.
Matt Damon ஒரு bankable நடிகர். Danny De Vito ஒரு உன்னத நடிகர், Jon Voight (உலகமே கொண்டாடும் Angelina Jollie யை பெற்றெடுத்த மகானுபாவன்) ஒரு சிறந்த வில்லன்/குணசித்திர நடிகர். இவர்கள் எல்லோருமே போட்டி போட்டுக்கொண்டு நடிக்கிறார்கள்.

சச்சினின் "டெண்டுல்கர் ஓபஸ்' (Tendulkar Opus)
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது "டெண்டுல்கர் ஓபஸ்' (Tendulkar Opus) என்ற அவரது சுயசரிதை புத்தகம். சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் (2011) வெளியிடப்பட உள்ளது.
தனிச்சிறப்பு: கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37Kg எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்
பதிவும் முடிந்து விட்டது.
ரத்தத்தின் ரத்தங்கள்: சச்சினின் ரத்தத்தின் ரத்தங்களாக கருதப்படும் ஏழை ரசிகர்களால் இப்புத்தகத்தை வாங்க முடியாது. இருப்பினும் 1 லட்சம் மற்றம் 1.50 லட்சம் ரூபாய்களிலும் இப்புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது. ஆனால் இவற்றில் சச்சினின் ரத்தம் இடம் பெறாது. கையெழுத்து மட்டுமே இடம் பெறும். இது தவிர, 10 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய்களிலும் இப்புத்தகத்தை வெளியிட கிரஹான் மீடியா ஏற்பாடு செய்து வருகிறது. அவரது டி.என்.ஏ., பற்றி தகவல்களும் இதில் இடம் பெற உள்ளன. இதற்காக அவரது உமிழ்நீர் கேட்கப்பட்டு உள்ளது.
புதுமை: இது குறித்து கிரஹான் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் கூறுகையில்,"" கிரிக்கெட் அரங்கின் கடவுளாக வர்ணிக்கப்படுகிறார் சச்சின். இதனால் "டெண்டுல்கர் ஓபஸ்' புத்தகத்தில் புதுமை செய்ய நினைத்தோம். அவரது ரத்தம் தோய்ந்த பக்கம் இடம் பெறுவதால், இப்புத்தகம் தனிச்சிறப்பை பெறுகிறது. உலககோப்பை தொடரை ஒட்டி இப்புத்தகத்தை வெளியிட திட்டமிட்டுள் ளோம்,'' என்றார்.
இதற்கு முன்.. : கிரிக்கெட் கடவுள் சச்சினின் சுயசரிதை புத்தகம் 37 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
ஆனால் இதற்கு முன் மைக்கேல் ஏஞ்சலோ என்ற புத்தகம் 49 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ள வரலாறு உள்ளது. கலைத்திறனை வெளிப்படுத்தும் இப்புத்தகம் கைகளினால் தயாரிக்கப்பட்டது. 30 கிலோ எடை கொண்டது. மொத்தம் 33 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்ட இப்புத்தகம் மார்பிள் மற்றும் வெல்வெட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது. நியூயார்க் பொது நூலகத்தில் இது இடம் பெற்றுள்ளது. இதனை குரூப்போ எப்.எம்.ஆர்., நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் இந்த மாதிரி ரத்த சமாசாரங்களை ஏன் செய்ய வேண்டும் என controversy உடனேயே கிளம்பி விட்டது. அட விடுங்கப்பா, அந்த 10 பிரதிகள் விற்று வரும் பணத்தை தரும காரியங்களுக்கு தரப் போவதாக சச்சினே சொல்லிவிட்டாரே.

Saturday, 7 August 2010
திரைப்பட விமர்சனம்-புவனா ஒரு கேள்விக்குறி
திரைப்பட விமர்சனம் தானே என்று சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம். மிக சிறந்த படத்தை, மிக சிறந்த விதமாக விமர்சிக்க ஆசை. வாசிப்பாளர்கள் ஏற்றுக் கொண்டால், என்னை பாதித்த, தனித்தன்மையுடன் கூடிய பழைய படங்களை பற்றி விவரிப்பேன்.
இந்த மூன்று மாதத்தில், மூன்று வெவ்வேறு சானல்களில் ஒரே திரைப்படத்தை மீண்டும், மீண்டும் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. விரும்பி பார்த்தேன். கறுப்பு வெள்ளை படம் தான். முப்பதி மூணு வருஷங்களுக்கு முன்னால் வந்தது. பத்து வருஷங்களுக்கு முன்னால் திரையரங்கில் பார்த்த படம் தான்.
என்னை மிகவும் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று. மகரிஷி என்பவர் எழுதிய நாவல். குமுதம் குழுமத்தின் வெளியீடான மாலைமதி எனும் பத்திரிகையில் முழு நாவலாக வெளி வந்தது. நாவலை படிக்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது. தனுஷின் மாமனாரும், ஜோதிகாவின் மாமனாரும் இணைந்து நடித்த படம். "புவனா ஒரு கேள்விக்குறி"
ரஜினியும், சிவகுமாரும் நடித்த படம். இதை திரைப்பட விமர்சன இடுகையாக மட்டும் இல்லாமல், மகரிஷியின் நாவல் குறித்த விமர்சனமாகவும் பார்க்கலாம். இந்த கதையின் நாயகர்களின் பாத்திரமே
மிக வித்தியாசமானது. மனிதர்களின் முரண்பாடுகளை பாத்திர வடிவில் அழகாக சித்தரித்து காட்டியது.
நல்லவன் போல் தோற்றமளிக்கும் ஒருவன்... அதாவது சிகப்பாக, அழகாக, நேர்த்தியாக, தன்மையுடன் பேசுபவனாக உள்ள ஒருவன் எல்லா
அயோக்கிய தனங்களையும் செய்கிறான். இதற்கு எதிர்மறையாக, அசிங்கமாக உள்ள ஒருவன்... கருப்பாக, பரட்டை தலையுடன், நக்கலாக பேசும் ஒருவன் மிக நல்லவனாக இருக்கிறான். ஏமாந்த பெரும்பாலான பேர்கள்- தோற்றத்தை பார்த்து, லாவகமான பேச்சை பார்த்து தான் ஏமாறுகிறார்கள். சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில், மாதவன் பொய் சொல்லி வடிவேலுவை பொது மக்களிடத்தில் அடிவாங்க வைப்பார். வடிவேல், அவன் பொய் சொல்றான்ய்யா என்று சொல்வார். அதற்கு ஒருவன், "செகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல பேசமாட்டான்ய்யா"
என்பான். "பொய் பேசறதுல செகப்பு, கருப்பு என்னடா. இதென்னடா புது லாஜிக்கா இருக்கு" என்பார் வடிவேலு.
அது உண்மைதான். அழகு தான் நம்மை ஏமாற்றுகிறது. "அழகா பேசினான்யா. அதுல தான் ஏமாந்துட்டேன்" என்று எவ்வளவோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். வசிகரமும், லாவண்யமும்- சில நேரம் ஏமாற்றவும் பயன் படுத்தப்படுகிறது தானே. பெண்கள் ஏமாந்து போய் தங்களை இழப்பது கூட அழகுகளிடம் தான். அப்படி தான் நாயகியும், நாகராஜனிடம் (சிவகுமாரிடம்) தன் தன்னை இழக்கிறாள். சிவகுமார்
படத்தில் ப்ளேபாயாக வருவார். அவரது வேலையே பெண்களை ஏமாற்றுவது தான். ஆனால் அதோடு தன் வாழ்க்கையின் வளர்ச்சியிலும் கண்ணாக இருந்து பணக்காராகவும் ஆகி விடுகிறார். கெடுக்கப்பட்ட புவனாவை (சுமித்ரா) கறுப்பாக, அசிங்கமாக இருக்கும் சம்பத் (ரஜினி) மணந்து கொள்கிறார்.
ஒரு பணக்காரியை சிவகுமார் மணந்து கொள்கிறார். காலங்கள் ஒடுகிறது. இளமையில் நாகராஜன் செய்த தவறுகளுக்கு நடுத்தர வயதில் தண்டனை கிடைக்கிறது. அவனது உயிரணுவில் வீரியம் குறைந்து அவனால் தந்தையாக முடியாத நிலை. புவனாவை அவன் கெடுத்ததன்
மூலம், அதனால் ஒரு குழந்தையை பெறுகிறாள் புவனா. அந்த குழந்தையை புவனாவிடமும், சம்பத்திடமும் கேட்கிறான். அவர்கள் கொடுப்பார்களா...
அந்த குழந்தைக்காக தான் அவர்கள் உயிர் வாழுகிறார்கள். நய வஞ்சகத்துடன் குழந்தையை அபகரிக்க நினைக்கிறான் நாகராஜன். அவர்களின் மனப் போராட்டமே மீதிக் கதை. கடைசியில் சம்பத் இறந்து போகிறான். புவனா தன் குழந்தையுடன் தனி மரமாக...
மனிதனிடம் நியாயமாக இருக்க வேண்டிய எந்த குணமும் இல்லாத
ஒருவன்,வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெறுகிறான். எல்லா குணங்களும் அமையப் பெற்ற ஒருவன்... வாழ்க்கையில், வளர்ச்சி குறித்து பெரிதாக கவலைப்படவில்லை. இரு துருவமாய் விளங்கும் இருவரையும் நட்பு இணைத்தது. சூழ்நிலை பிரித்து போட்டது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.அங்கங்கே வழக்கமான சென்டிமெண்ட் காட்சிகள் இருந்தாலும், கதையின் கதை மாறுபட்டது. மேலும் நாயகர்கள் தங்கள் வாழ்க்கையை ப்ளாட்பார்மில் துணி விற்பவர்களாக தான் துவக்குகிறார்கள். ஒரளவுக்கு யதார்த்த தன்மை நிறைந்த படம். எந்த வித சமரசங்களுக்கும் இடம் தராமல் எடுத்து இருப்பார்கள்.
ஆரம்பக்கால ரஜினியை ரசிக்க இரண்டு கண்கள் போதாது. பாத்திரத்துக்கு தகுந்த ரஜினியின் தோற்றம் அம்சமாக பொருந்தியது. அழகான சிவகுமார் ப்ளேபாயாக. ஏமாறும் அபலையாக சுமித்ரா. மகரிஷியின் கதைக்கு, வசனமும் பாடல்களும் எழுதியவர் பஞ்சு அருணாசலம். படம் முழுக்க நல்ல வசனங்கள். இயக்கம் எஸ்.பி. முத்துராமன்.எஸ்பி. முத்துராமன் தானே என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நிறைய நல்ல படங்களையும் இயக்கியுள்ளார்.
இசை... இசை ஞானி. மூன்று அற்புதமான பாடல்கள். "ராஜா என்பார்... மந்திரி என்பார்... ராஜ்யம் இல்லை ஆழ, ஒரு ராணியும் இல்லை வாழ" என்னை வெகுவாக கவர்ந்த பாடல் அது. இன்னொரு பாடல் "விழியிலே
மலர்ந்தது... உயிரிலே கலந்தது."... வெற்றி பெற்ற லோ படஜெட் படம்.
இந்த தலைமுறை இயக்குனர்கள், நடிகர்கள் என்று சகலரும், சென்ற
தலைமுறை திரைக்கலைஞர்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக்கொள்ளுங்கள். பழைய படங்களை நிறைய ரீமேக் செய்கிறார்கள். அந்த வகையில் புவனா ஒரு கேள்விக்குறியை ரீமேக் செய்யலாம். புதிய இயக்குனர்களுக்கு ஒரு சவாலான கதை தான்.

Friday, 6 August 2010
திருநீறிட்டார் கெட்டார்
1. "திருநீறிட்டார் கெட்டார் ; இடாதார் வாழ்ந்தார்" என்பது பழமொழி. இதன் உண்மை பொருள் "திருநீறிட்டு யார் கெட்டார் ; இடாது யார் வாழ்ந்தார்" என்பதாகும்.
2. "குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்" என்பது பழமொழி.ஆனால் இது உண்மையிலேயே இது "குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படணும்" என்பதே சரியானது. அதாவது, தன்னை குட்டுகிறவன் தன் சக்திக்கு நிகராக மோதுகிற தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே பழமொழியின் அர்த்தம்.
-குன்றக்குடி அடிகளார்.
3. "மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே பழமொழி.ஆனால் உண்மையிலே இது "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள்.இது பாறை போல் காட்சியளித்தாலும், அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.குதிர் என்பது குதிரை என திரிந்து விட்டது.

Subscribe to:
Comments (Atom)