படத்தின் கதை
கதாநாயகன் Chris Gardner ஒரு நடுத்தர குடும்பத் தலைவர். Linda என்ற மனைவி, Christopher Gardner Jr. என்ற மகனுடன் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு வாடகை அபார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறார். தன்னுடைய சேமிப்பை மொத்தமாக முதலீடு செய்து வாங்கிய மருத்துவ ஸ்கேனிங் மெஷின்கள் விற்பனையில் காலை வாரிவிட, வருமானத்துக்கு குடும்பம் திண்டாடத் தொடங்குகிறது. வாழ்க்கையில் தோற்றுப் போன ஒருவன் வாழ முடியுமா?
மாதக் கடைசி பிரச்னைகள் கழுத்தை நெரிக்க… பொருளாதார சுமையைத் தாங்க முடியாத மனைவி, Chris சையும் மகன் Christopher ரையும் தனியே உன்னை விட்டு போகின்றேன் என்று சொல்லி விட்டு நியூயார்க் சென்று விடுகிறாள்.
ஒரு ஷேர் புரோக்கர் உதவியால் Chrisசுக்கு ஒரு நிறுவனத்தில் ஷேர் புரோக்கர் வேலை கிடைக்கிறது.ம்பளமில்லாமல் ஆறு மாத டிரெய்னிங் முடித்தபின்தான் அந்த வேலை கிடைக்கும். அதிலும் அந்த டிரெய்னிங்கில் கலந்துக் கொண்டுள்ள 20 பேரில் ஒருவருக்குதான் அந்த வேலை உறுதியாக்கப்படும். நிச்சயமற்ற எதிர்காலமாயினும் நம்பிக்கையுடன் நேர்முக பேட்டிக்கு வர Chris சம்மதிக்கிறார்.
ஆறுமாத சம்பளம் இல்லாத வேலை, அதற்க்கு 20 பேர் போட்டி அதில் ஜெயித்து ஆக வேண்டிய கட்டாயம் ....ஆறு ஸகேனர் மட்டும்தான் அவன் வசம்... அது கூட விற்றால்தான் கையில் காசு. வேலைக்கு போகத் தொடங்கிய சில நாட்களிலேயே தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல், சின்ன பட்ஜெட் மோட்டல் ஒன்றில் தங்க வேண்டிய நிலை. ஒரு கட்டத்தில், அதுவும் இல்லாமல் போக ரயில் நிலைய டாய்லெட்டில் மகனுடன் இரவைக் கழிக்க நேர்கிறது. இறுதியில் Chris Gardner வாழ்க்கை என்னவாகிறது? அவரது கஷ்டங்கள் தீர்கிறதா? அவரது வேலை நிரந்தமாகிறதா? தொலைத்து விட்ட மகிழ்ச்சியை அவர் திரும்ப பெற்றாரா?
என்பதை இயக்குனர் கண்ணீர் சொட்ட சொல்லி இருக்கிறார்
இறுதியில் கதாநாயகனுக்கே அந்த வேலை கிடைக்கிறது ....கடைசியாக கதாநாயகன் சிறிது கொண்டே நடந்து வரும்போது வெற்றி பெற வேண்டும் என்பவர்களுக்கு வேண்டிய முதல் தகுதி தன்னம்பிக்கையாகும்.என்பதை இயக்குனர் வலுவான திரைக்கதையோடு தெளிவாக சொல்லி இருக்கிறார்.
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
நடு ரோட்டில் உன்னை விட்டு போகின்றேன் என்று சொல்லி விட்டு போகும் மனைவியிடம் எவ்வளேவோ சமாதான வார்த்தைகள் சொல்லியும் கேளாமல் போவேன் என்று அடம் பிடிக்கும் போது... போ இந்த இடத்தை விட்டு போ... போய் சந்தோஷமாக வாழ் என்று மனையிடம் சொல்லும் போது அந்த நடிகனை நான் மிகவும் நேசித்தேன்....
பார்க்கிங் காசு இல்லாமல் ஜெயிலில் அடைபட்டு இன்ட்ர்வியுவுக்கு போகும் போதே அவன் நேற்று பெயின்ட் அடித்த சட்டையோடு இன்டர்வியு செல்ல, இன்டர்வியுவுக்காக,அழைக்கும் பெண் கிரிஸ் என்று அழைக்க, காதில் விழாதது போல் இருந்து விட்டு, எப்படி இந்த லட்சணத்தோடு உள்ளே செல்வது என்று யோசித்து விட்டு சட்டென எழுந்து உள்ளே செல்வதும்.....
சட்டையே இல்லாமல் இன்டர்வியுவுக்கு வருபவைனை நீ எப்படி பார்ப்பாய் என்று கேட்க அவன் போட்டு இருக்கும் பேண்ட்டை அழகான பேன்ட் என்று பார்ப்பேன் என்று சமயோஜிதமாக சொல்வது அழகு...
அப்பா கஷ்டபடுவது பிள்ளைக்கு தெரிந்து அவன் ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் சாக்லெட்டை ஆசையோடு பார்க்க, வேண்டுமா என்ற கேட்க? வேண்டாம் என்று சொல்லும் அந்த குழந்தையை உச்சி முகர்ந்து கொஞ்ச தோன்றும்....
இரவு தங்க இடமில்லை. பையனிடம் அது குறித்து சொல்ல முடியாது. டாய்லெட்டில் உறங்கப் போகிறோம் என்று எப்படி மகனிடம் சொல்வது? டாய்லெட் கதவுகள் தட்டப்படும் போதெல்லாம் வாய்விட்டு அழ முடியாமல் உள்ளுக்குள்ளேயே குமுறிஅழும் இடத்தில நானும் அழுதே விட்டேன்...!
தன் நண்பன் தனக்கு தர வேண்டிய 14 dolar பணத்தை திருப்பி கேட்கும் போதும், தன்னுடைய முதல்லை சில்லறை இல்லை என அவரிடம் இருக்கும் 5 டாலரை கேட்க்கும் போதும் தன்னிடம் உள்ளது வெறும் 5 டாலர் தான் என் தெரிந்தும் அதை கொடுக்கும் போதும்,மகனுக்கு அறிவுரை சொல்லும்போதும் சரி,அழுக்கு சட்டையுடன் இன்டெர்வியு
கொடுக்கும் போதும் சரி, அருமையான நடிப்பு என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை
நாளையில் இருந்து நீ வேலைக்கு வரலாம் என்று சொல்லும் போது ,வில்ஸ்மி்த் வெளிபடுத்தும் எக்ஸ்பிரஷன் இன்னோரு கமலை பார்த்தது போல் இருந்தது.. அதே போல் அந்த இடத்தில் முழுவதும் கேமரா குளோசப்பில் ஸ்மித்தை பாலோ செய்வதும், வெளியே வந்து தன் சந்தோஷத்தை பகிர கூட யாரும் இல்லாமல், தனக்கு தானே சந்தோஷம் கொள்ளும் காட்சிகள் கவிதை...
அப்பா கஷ்டபடுவது பிள்ளைக்கு தெரிந்து அவன் ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் சாக்லெட்டை ஆசையோடு பார்க்க, வேண்டுமா என்ற கேட்க? வேண்டாம் என்று சொல்லும் அந்த குழந்தையின் நடிப்பு ஐயோ அருமையிலும் அருமை
அவர் போன் பேசி விட்டு போனை கீழ வைக்காமல் அடுத்த போன் பேசுவார் இப்படி அவரது உழைப்பை அருமையாக காட்டியிருக்கு இயக்குனர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்
படத்தின் Awards....
* MTV Movie Award for Best Male Performance (Will Smith, nominee)
* MTV Movie Award for Best Male Breakthrough Performance (Jaden Smith, winner)
* Broadcast Film Critics Association Award for Best Actor (Will Smith, nominee)
* BFCA Critics' Choice Award for Best Young Actor (Jaden Smith, nominee)
* BET Award for Best Actor (Will Smith, nominee)
* PFCS Award for Best Performance by Youth in a Leading or Supporting Role - Male (Jaden Smith, winner)
* Chicago Film Critics Association Award for best actor (Will Smith, nominee)
* Italian National Syndicate of Film Journalists for Best Score (Andrea Guerra, nominee)
* David di Donatello Awards for Best Foreign Language Movie (Gabriele Muccino, nominee)
* Capri Award for Movie of The Year (winner)
Directed by....................Gabriele Muccino
Produced by...................Will Smith,Steve Tisch,James Lassiter,Todd Black,Jason Blumenthal
Written by......................Steven Conrad
Starring.........................Will Smith,Jaden Smith,Thandie Newton,Brian Howe,Dan Castellaneta
Music by........................Andrea Guerra
Cinematography...............Phedon Papamichael
Editing by.......................Hughes Winborne
Distributed by..................Columbia Pictures
Release date(s)................December 15, 2006 United States
......January 12, 2007 United Kingdom
Running time...................117 minutes
Country..........................United States
Language........................English
Budget............................$55 million
Gross revenue..................$307,077,295
விக்கி நடு ரோட்டில் உன்னை விட்டு போகின்றேன் என்று சொல்லி விட்டு போகும் மனைவி.....இந்த காட்சி என்னை மிகவும் பாதித்தது...பெண்கள் பொதுவாகவே வெற்றி பெற்றவையே தேடி போகிறார்கள் ...அதனால்தான் அவர்கள் ஆணுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள் ..மனைவியாக இருந்தாலும் சரி காதலியாக இருந்தாலும் சரி உங்கள் கணவர் மீதோ அல்லது காதலன் மீதோ அளவு கடந்த நம்பிக்கை வையுங்கள் ..உங்களுடைய கணவரும் ஒரு கிரீஸ் கார்ட்னர் தான் என்பதை மறந்து விடாதிர்கள்...நீங்கள் அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை அவர்களது தன்னம்பிக்கை என்பதை மறந்து விடாதிர்கள்..வெற்றி பெற்றவர்களிடம் அடிக்கலாம் புக நீங்கள் நினைக்கும் போது உங்கள் சுயத்தை நீங்கள் இழந்து விடுவீர்கள்....நீங்கள் உருவாக்குங்கள் அல்லது துணை நில்லுங்கள் பெண்மைக்கு அவ்வுளவு சக்தி உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்..
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டாம் பாகம் உண்டு.....இதை என்னால் நிச்சயமாய் சொல்ல முடியும் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு இரண்டு கால்களும் செயலிழந்து போனது ....மருத்துவர்கள் கைவிட்ட பிறகு கூட அவரது புத்தக அலமாரியை பார்த்து அதிர்ந்தே போய்விட்டேன் ......தன்னம்பிக்கை,தோற்று ஜெயித்தவர்கள் , என அவர் நம்பிக்கை கைவிடாமல் இருந்தார்...தற்போது அவரது காலில் சிறிது அசைவுகள் தெரிகிறது அமெரிக்கா மருத்துவர்கள் இது அதிசயம் என்று சொல்லியிருகிறார்கள்..........இன்னும் எடுத்துகாட்டிற்கு வில்லியம் எல்.சைமன் என்பவர் தோற்று மறுபடியும் எவ்வுளவு முன்னேறினார் என்பது உங்களுக்கே தெரியும்...நீங்கள் படித்திருப்பீர்கள் ஆப்பிள் ipod ,itunes என்று உலக தொழிலதிபர்களில் ஒருவராகிவிட்டார் ....அவரை எல்லோரும்[ THE GREATEST SECOND ACT IN THE HISTORY OF BUSINESS ] என்று அழைகிறார்கள்....விழுவதில் தவறில்லை. விழுந்தபின்பும் அமைதியாய் இருப்பதுதான் தவறு. விழுந்தபின்பு மீண்டும் எழுந்து நடப்பதில்தான், நமது வெற்றியின் ரகசியமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மூடிய கதவுகளை முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்காதிர்கள். அதையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்காதிர்கள். திறந்திருக்கும் கதவுகளை தேட முயலுங்கள். ஒவ்வொரு வினாடியும் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் மனிதனுடைய கால்களை முன்னோக்கி நடக்கும் விதத்தில் அமைதிருகிறார். என்பதை மறந்துவிடாதிர்கள்
அறிவு பலவீனமுடையது. நம்பிக்கை சர்வசக்தியுடையது...தன்னம்பிக்கை இல்லாமல்
பயத்துடன் வாழும் வாழ்க்கையும்,உயிருடன் கல்லறையில்உறங்குவதும், ஒன்றே!!!
"தோல்வி உறுதி" என்கிற நிலையிலும் போராடத் துணிந்தவனே உண்மையான வீரன். "வெற்றி பெறுவோம்" என்று நம்புங்கள். இறுதிவரை போராடுங்கள். விடாமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.[முசோலினி தன் மேஜை மீது வைத்திருந்த பொன்மொழி]
வரலாறுகளை நீ படிக்காமல் வரலாறுகள் உன்னை படிக்கட்டும்......ஒவ்வொரு தமிழன் வெற்றி பெறும்போது நானே வெற்றி பெற்று விட்டதாக பெருமிதமடைவேன்.............வாழ்த்துக்கள் நண்பர்களே .........

wow..my most favorite movie in Hollywood..!
ReplyDelete